
“புஷ்பா 2” திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ள நிலையில் பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளது. சமீபத்தில் படம் பார்க்க வந்த பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிர் இழந்தது, அதனை தொடர்ந்து அவரது மகன் மூளை சாவடைந்தது என தொடர்ந்து நடந்த சர்ச்சையால் நடிகர் அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது. பின் ஜாமனிலிருந்து வெளிவரப்பட்டது என தொடர்ந்து சிக்கலில் இந்தத் திரைப்படம் ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் காவல்துறையினரால் 2 கொலை உட்பட 27 வழக்குகள் நிலுவையில் உள்ள மிகப்பெரிய தேடப்பட்டு வந்த குற்றவாளியான விஷால் மேஷ்ரம் “புஷ்பா 2” படத்தை பார்க்க வந்த போது கிளைமாக்ஸில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். விஷால் மேஷ்ரம் கடந்த 10 மாதங்களாக காவல்துறையினரால் தீவிரமாக தேடப்பட்ட வந்த குற்றவாளி ஆகும். நாக்பூரில் உள்ள திரையரங்கிற்கு “புஷ்பா 2” திரைப்படம் பார்க்க வந்ததாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் ஒன்று கிடைத்தது.
இதன் அடிப்படையில் திரையரங்கிற்கு வந்த காவல்துறையினர் முதலில் குற்றவாளியான விஷால் மேஷ்ரம் காரை பஞ்சர் செய்துவிட்டு திரையரங்கிற்குள் நுழைந்துள்ளனர். பின்னர் கிளைமேக்ஸ் காட்சி ஓடிக் கொண்டிருக்கும்போது எதிர்பாராத விதமாக விஷால் மேஷ்ரமை காவல்துறையினர் தப்பி விடாமல் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர். இதனால் தியேட்டரில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.