இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஷாஹத்ரா மாவட்டத்திலுள்ள பார்ஷ்பஜார் பகுதியில் சுனில் ஜெயன்(53) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்று காலை வாக்கிங் செல்லும்போது பைக்கில் வந்த மர்ம நபர்களால் துப்பாக்கியால் ஏழு, எட்டு முறை சுடப்பட்டு சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டார். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்துவிட்டு தப்பியோட குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருவதாக துணை கமிஷனர் தெரிவித்துள்ளார். ஜெயின் குறித்து அவர்களது குடும்பத்தினர் அவருக்கு எதிரிகள் யாரும் இல்லை என கூறுகின்றனர்.

இதேபோன்று நேற்று இரவு டெல்லியில் கோவிந்தபுரி பகுதியில் பிஹாம் சிங் என்பவருக்கும், இவரது பக்கத்து வீட்டுக்காரர் சுதீர். இருவருக்கும் இடையே பொது கழிவறை சுத்தம் செய்வது குறித்து சண்டை ஏற்பட்டுள்ளது. இந்த சண்டை அதிகமாகி கடைசியில் பிஹாம் சிங், சுதீரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது குறித்த அறிந்த காவல்துறையினர் பிஹாம் சிங்கை கைது செய்துள்ளனர். விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சம்பவங்களையும் தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு ஆம் ஆத்மி கட்சியின் பொதுச்செயலாளர் அரவிந்த் கெஜ்ரிவால் பாஜக ஆட்சியில் கொலைகள் சர்வ சாதாரணமாக நடைபெறுகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.