இந்தியாவில் மத்திய அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு புதிய ஓய்வூதியத்தை அறிமுகம் செய்தது. இதற்கு அரசு ஊழியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் சில மாநில அரசுகள் ஊழியர்களின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியது. மத்திய அரசு ஊழியர்களும் தொடர்ந்து பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி வருகிறார்கள். இந்நிலையில் ரிசர்வ் வங்கி மாநில அரசின் இந்த முடிவுகளுக்கு தற்போது மத்திய அரசை எச்சரித்துள்ளது.

அதாவது மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தியதால் மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளின் நிதிச் சுமை அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. அரசின் இந்த பெரிய நடவடிக்கை கண்டிப்பாக மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. மேலும் வரவிருக்கும் ஆண்டுகளில் நிதி இல்லாத ஓய்வூதிய பிரச்சனைகள் வரக்கூடும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.