
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ராகுல் காந்தியின் நீதியாத்திரையில் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பிரியங்கா காந்திக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. குணமடைந்த பிறகு ராகுல் காந்தியின் நீதி யாத்திரையில் பங்கேற்பதாக பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.பிரியங்கா காந்தி தனது எக்ஸ் பக்கத்தில், பாரத் ஜோடோ நியாய யாத்திரை உத்தரபிரதேசத்தை அடையும் என ஆவலுடன் காத்திருந்தேன், ஆனால் உடல் நலக்குறைவு காரணமாக இன்றே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
நன்றாக உணர்ந்தவுடன் பயணத்தில் இணைவேன். அதுவரை, சந்தௌலி-பனாரஸை அடையும் அனைத்து மக்களுக்கும், பயணத்திற்கு விடாமுயற்சியுடன் தயாராகி வரும் உத்திரபிரதேசத்தின் எனது சகாக்கள் மற்றும் அன்பான சகோதரருக்கு எனது நல்வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.
मैं बड़े चाव से उत्तर प्रदेश में भारत जोड़ो न्याय यात्रा के पहुँचने का इंतजार कर रही थी, लेकिन बीमारी की वजह से मुझे आज ही अस्पताल में भर्ती होना पड़ा। थोड़ा बेहतर होते ही मैं यात्रा में जुड़ूँगी। तब तक के लिए चंदौली-बनारस पहुंच रहे सभी यात्रियों, पूरी मेहनत से यात्रा की तैयारी…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 16, 2024