பாலிவுட் மற்றும் ஹாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் பிரியங்கா சோப்ரா (40). கடந்த 2000-ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற பிரியங்கா சோப்ரா விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அதன் பிறகு ஹிந்தியில் நடிக்க ஆரம்பித்த பிரியங்கா சோப்ரா முன்னணி நடிகையாக உயர்ந்தார். நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்காவைச் சேர்ந்த பாடகர் நிக்ஜோன்ஸ் (30) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் மல்டி மேரி என்ற ஒரு மகள் இருக்கிறார்.

இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் தான் உலக அழகி பட்டத்தை வென்ற போது தன்னுடைய கணவருக்கு வயது ஏழுதான் என பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். அதாவது பிரியங்கா சோப்ரா தன்னுடைய 17-வது வயதில் உலக அழகி பட்டத்தை வென்றார். இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு குழந்தையாக இருந்த நிக் ஜோன்ஸ் அவருடைய தந்தையுடன் சென்றுள்ளார். அப்போது நிக்ஜோன்ஸ் வயது 7 தான். இந்த விவரத்தை தன்னுடைய மாமியார் சொன்னதாக பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். மேலும் பிரியங்கா சோப்ராவுக்கும் அவருடைய கணவர் நிக் ஜோன்ஸுக்கும் இடையே 10 வயது வித்தியாசம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.