சேலம் மாவட்டத்தில் உள்ள வெள்ளாண்டி வலசை பகுதியில் விஜயன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார் நேற்று மாலை சேலம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு விஜயன் எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த பேருந்தில் கதிர் என்பவர் நடத்துனராக பணியில் இருந்தார். இந்நிலையில் அரியலூர் அருகே சென்ற போது பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது.

சில வினாடிகளில் பேருந்தின் பின்பக்க சக்கரங்களின் அச்சு முறிந்து தனியாக கழன்று விழுந்தது. இதனால் பேருந்தின் பின்பகுதி சாலையில் உரசிபடி சென்றதால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. அப்போது சாதூர்யமாக செயல்பட்டு ஓட்டுனர் பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பின்னர் பயணிகள் மாற்று பேருந்து மூலம் ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.