பிரிட்டன் இளவரசர் ஹாரி ஒரு நேர்காணலில் தன் தந்தை மற்றும் சகோதரன் தனக்கு திரும்பி கிடைக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகன் மெர்க்கல் இருவரின் நெட்பிலிக்ஸ் தொடர் வெளிவந்தது. அந்த தொடர் ராஜ குடும்பத்தினரிடையே அதிர்வலைகளை உண்டாக்கியது. இதைத் தொடர்ந்து வரும் பத்தாம் தேதி அன்று இளவரசர் ஹாரியின் ஸ்பேர் என்னும் நினைவு குறிப்பு புத்தகம் வெளியாக இருக்கிறது.

இதனிடையே இளவரசர் ஹாரி நேர்காணலில் கலந்து கொண்டார். அந்த நேர்காணலானது வரும் எட்டாம் தேதி அன்று ஒளிபரப்பப்பட இருக்கிறது. அந்த சிறப்பு நிகழ்ச்சியானது 90 நிமிடங்கள் ஒளிபரப்பாகும் நிலையில், 20 நொடிகள் ஓடக்கூடிய அதன் முன்னோட்ட காட்சிகள் வெளிவந்திருக்கிறது.

அதில், இளவரசர் ஹாரி தொகுப்பாளரிடம், “இது எப்போதும் இவ்வாறு இருக்க வேண்டிய தேவை கிடையாது. எனக்காக குடும்பம் வேண்டும், ஒரு நிறுவனம் வேண்டாம்” என்கிறார். மேலும் எங்களை எப்போதும் வில்லன்களாக இருக்க வைப்பது நல்லது என அவர்கள் கருதுகிறார்கள். “சமாதானம் செய்ய அவர்கள் விரும்பவில்லை. என் தந்தையை திரும்ப பெற நினைக்கிறேன், என் சகோதரனை திரும்ப பெற நினைக்கிறேன்” என்று கூறி இருக்கிறார்