இந்தியாவின் மத்திய அரசு மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் முக்கியமானது “பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா” (PM Surya Ghar Yojana). இந்த திட்டத்தின் மூலம், அரசின் மானியத்துடன் தகுதியான நபர்களின் வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவப்படுகிறது. இதற்கான நோக்கம், மக்களுக்கு சூரிய மின்சக்தியின் பலன்களை வழங்கி, மின்கட்டணத்தை குறைப்பதாகும். இதன் மூலம், வெகு குறைந்த வருமானம் உள்ள மக்கள் சூரிய மின்சக்தியைப் பயன்படுத்தி, மின் செலவுகளை நன்கு குறைக்க முடியும்.

பிரதம மந்திரி சூர்யா கர் யோஜனா திட்டத்தின் கீழ், மாதந்தோறும் உதவித்தொகை மற்றும் மானியங்கள் வழங்கப்படுகிறது. உதாரணமாக, 1-2 கிலோவாட் மின்சார உற்பத்திக்கு ரூ. 30,000 மானியம் வழங்கப்படும். 1-150 யூனிட் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீடுகள், சோலார் பேனல்கள் நிறுவுவதன் மூலம் மின்கட்டணத்தை முழுமையாகச் சேமிக்கலாம். இதன் மூலம், 1 கோடி மக்களுக்கு சூரிய மின்சக்தியின் பலன்களை வழங்குவது தான்  திட்டத்தின் முக்கிய நோக்கம்.

இந்த திட்டத்தில், நடுத்தர வகுப்பை சேர்ந்தவர்கள் அதிகமான பயனாளிகள் ஆக இருப்பார்கள். சொந்த வீடு உள்ளவர்களே இதற்குப் பயனாளிகள், மேலும் ஆண்டு வருமானம் ரூ. 1.5 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்களே இதற்கு தகுதியானவர்கள். இந்த திட்டம் மூலம், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சூரிய மின்சக்தி உற்பத்தி ஊக்குவிக்கப்படுவதாக உள்ளது.

இந்த திட்டத்தில் இணைவதற்கு, [pmsuryaghar.gov.in](https://www.pmsuryaghar.gov.in/) என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். மேலும், 15555 என்ற இலவச தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு மேலதிக விவரங்களைப் பெறலாம். இதன் மூலம், மக்களால் இனி மின் கட்டணங்கள் பற்றிய கவலையே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.