பிரதமர் நரேந்திர மோடி பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி ஆதரவு கொடுத்து பேசியுள்ளார். அதாவது கேரளாவிலிருந்து 32 ஆயிரம் பெண்கள் வெளிநாட்டுக்கு கடத்திச் செல்லப்பட்டு இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்படுகின்றனர். அதன் பிறகு அவர்கள் தீவிரவாத செயலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இதுதான் படத்தின் கதை. இதற்கு கேரள மாநிலம் முதல்வர் பினராயி விஜயன், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பல இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கேரள உயர்நீதிமன்றத்தில் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் வழக்கு தொடர்ந்தது. ஆனால் உயர் நீதிமன்றம் மதத்திற்கு எதிரான கருத்துகள் தி கேரளா ஸ்டோரி படத்தில் சொல்லப்படவில்லை எனவும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிராகத்தான் படத்தின் கதை இருக்கிறது எனவும் கூறி படத்திற்கு தடை விதிக்கவில்லை.

இந்நிலையில் கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது இதை கேரளா ஸ்டோரி படத்திற்கு ஆதரவு தெரிவித்து பேசினார். அவர் கேரள மாநிலத்தில் பல அறிவார்ந்த மக்கள் இருக்கிறார்கள். தீவிரவாதம் எப்படி ஊடுருவிகிறது என்பதை தான் தி கேரளா ஸ்டோரி படம் காட்டுகிறது. இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவு கொடுக்க காங்கிரஸ் கட்சி முயற்சிக்கிறது. இது போன்ற விஷயங்களை புறக்கணிக்கவும், நாட்டின் வளர்ச்சியை தடுக்கவும் மட்டுமே காங்கிரஸ் கட்சிக்கு தெரியும். மேலும் தி கேரளா ஸ்டோரி படம் தீவிரவாதத்தின் புதிய முகத்தை அம்பலப்படுத்தி உள்ளது என்று கூறியுள்ளார்.