அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் 47வது ஜனாதிபதியாக ஜனவரி மாதம் இருபதாம் தேதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றார். இந்தப் பதவியேற்பு விழாவில் இந்தியாவின் சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கலந்துகொண்டு வாழ்த்தினார். அமெரிக்காவின் 47வது ஜனாதிபதி ட்ரம்பை பிரதமர் மோடி இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இந்த தொலைபேசி உரையாடலில் பேசியது குறித்து பிரதமர் மோடி தனது இணையதள பக்கத்தில் பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில், எனது அன்பு நண்பர் ஜனாதிபதியுடன் பேசுவதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரது வரலாற்று சிறப்புமிக்க இரண்டாவது முறையாக பதவி ஏற்ற டொனால்ட் ட்ரம்ப் அவருக்கு வாழ்த்துகள். பரஸ்பர நன்மை மற்றும் நம்பகமான கூட்டாண்மைக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம். நாங்கள் நமது மக்களின் நலனுக்காகவும், உலக அமைதி, செழிப்பு மற்றும் பாதுகாப்பிற்காகவும் இணைந்து செயல்படுவோம். இவ்வாறு பதிவிட்டுள்ளார். டிரம்ப்  பதவியேற்ற பின் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் உரையாடிய முதல் உரையாடல் ஆகும்.