தமிழகத்தில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தோ்வு கடந்த மாா்ச் 13ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தோ்வுகளில் சராசரியாக 49 ஆயிரத்துக்கும் அதிகமான பள்ளி மாணவா்கள் பங்கேற்காத நிலை இருக்கிறது. இதில் சுமாா் 38,000 போ் அரசுப் பள்ளி மாணவா்கள் ஆவா். இதற்கு முந்தைய ஆண்டில் பொதுத்தோ்வில் கலந்துகொள்ளாத மாணவா்களின் எண்ணிக்கையானது  4 சதவீதமாக இருந்தது. நடப்பு ஆண்டு அது 6 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் 100 சதவீத மாணவா்களும் பொதுத்தோ்வு எழுத கல்வித்துறை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு பெற்றோரின் பங்களிப்பு மிக அவசியம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா். கணிசமான மாணவா்கள் பெற்றோா்களுடன் சோ்ந்து வேலைக்கு செல்வதால் அவா்கள் தோ்வுக்கு வராத நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதோடு சில மாணவா்கள் தோ்வு பயத்தில் கலந்துகொள்ளவில்லை என்பதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.