இந்தியாவிலுள்ள ஏழை எளிய மக்களும் தங்களுக்கென்று ஒரு சேமிப்பு கணக்கை தொடங்க வேண்டும் என்பதற்காக போஸ்ட் ஆபீஸ் பல்வேறு சிறுசேமிப்பு மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் ‘கிராம் சுரக்ஷா யோஜனா’திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டமானது கிராமப்புற மக்களுக்கு ஆயுள் காப்பீடு உத்திரவாதத்தை வழங்கும் நோக்கில் 1995ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தில் 18 – 55 வயது உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். மேலும் இதில் தினசரி ரூபாய் 50 சேமித்தால் எப்படி ரூபாய் 35 லட்சத்தை திரும்ப பெறலாம் என்பதை பற்றி பின்வருமாறு விரிவாக காணலாம். உதாரணமாக இந்த திட்டத்தில் நீங்கள் 19 வயதிலிருந்து தினமும் ரூபாய் 50 சேமித்து வைத்து 1 மாதத்திற்கு ரூபாய் 1515 செலுத்தினால் 55 வயது முதிர்வு காலத்திற்கு ரூபாய் 31 லட்சத்தை நீங்கள் பெறலாம். இந்த திட்டத்தில் ரூபாய் 10 ஆயிரம் முதல் ரூபாய் 10 லட்சம் வரை பிரீமியம் தொகை முதலீடு செய்யலாம்.
மேலும் பிரீமியம் தொகை செலுத்துவோருக்கு பல்வேறு சலுகைகளும் இந்த திட்டத்தில் வழங்கப்படுகின்றது. அதாவது நீங்கள் பிரீமியம் தொகையை மாதம் ஒருமுறை காலாண்டுக்கு, ஒரு முறை, அரையாண்டு அல்லது வருடாந்திர முறையில் செலுத்தலாம். இதில் நீங்கள் முதிர்வு காலமாக 58 வயதை தேர்ந்தெடுக்கும் போது மாதாந்திர முதலீடாக ரூபாய் 1463 செலுத்த வேண்டும். அப்போது ரூபாய் 33.40 லட்சம் கிடைக்கும். 60 வயதை தேர்ந்தெடுக்கும் போது ரூபாய் 1415 செலுத்தினால் 34.60 லட்சம் முதிர்வு தொகையாக கிடைக்கும்.
ஒருவேளை நீங்கள் ஒரு மாதம் பிரீமியம் செலுத்த தவறும் பட்சத்தில் அடுத்த 30 நாட்களுக்குள் டெபாசிட் செய்யும் வசதியும் உள்ளது. அதோடு 80 வயது நிறைவடைந்த பின் மொத்த முதிர்வு தொகையும் உங்களுக்கு வழங்கப்படும் அது மட்டுமின்றி இந்த திட்டத்தில் ஆண்டுக்கு ரூபாய் 60 போனஸ் ஆகவும் வழங்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.