சென்னையில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு கூறியதாவது, 300 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ராஜாவுக்கு, அந்தப்புரம் மகளிருக்கு சேவை செய்ய வந்தார்கள். அவர்கள் தெலுங்கு பேசியதால், எல்லாம் தமிழர்கள் இனம் என்று சொல்லும் போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு இங்கு யார் இருக்கிறார்கள். அதனால் தான் இங்கு தமிழர்கள் முன்னேற்றக் கழகம் என்று வைக்க முடியவில்லை என்ற கூறினார்.
இந்த கருத்து பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதோடு பலரும் கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இந்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்த நடிகை கஸ்தூரி, இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, தெலுங்கு மக்களை புண்படுத்துவது என்னுடைய நோக்கம் இல்லை. கவனக் குறைவாக வந்த வார்த்தைகள் உங்களை காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன். அவர்களைப் பற்றி பேசிய அனைத்து வார்த்தைகளையும் நான் திரும்பப் பெறுகிறேன் என்று கூறியுள்ளார். இதற்கிடையில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் திமுக துணை பொதுச்செயலாளரான ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை குற்றப்பரம்பரையாக சித்தரிப்பதா? சினிமாவில் வாய்ப்பு இல்லாததால் அவரை விளம்பரப்படுத்திக் கொள்ள அவதூறாக பேசுகிறார். அனைத்து சமூகத்தினரும் பாதுகாப்பாக வாழ்வதற்கும், விரும்பிய தொழிலை செய்வதற்கும், தமிழ்நாட்டில் எந்த ஒரு தடையும் இல்லை. இவ்வாறு திராவிடம் மாடல் ஆட்சிக்கு களங்கம் கற்பிக்க எடுக்கப்படும் முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது என்று அவர் கூறினார்.