இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் வங்கி கணக்குகளை விட தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் இணைய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் முதலீட்டாளர்களை கவரும் வகையில் பல சேமிப்பு திட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இதில் அஞ்சலக டைம் டெபாசிட் திட்டத்தில் குறைந்தபட்சம் 6.9 முதல் அதிகபட்சம் 7.5 சதவீதம் வரை வட்டி கிடைக்கும். இந்த வட்டி தொகை முதலீட்டு தொகைக்கு ஏற்றவாறு நிர்ணயம் செய்யப்படுகின்றது. முதலில் ஆயிரம் ரூபாய் செலுத்தி நீங்கள் கணக்கை தொடங்கலாம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதற்கு அதிகபட்ச வரம்பு என எதுவும் கிடையாது.

ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலத்துடன் கூடிய இந்த திட்டத்தில் வட்டி காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிடப்படும். ஒருவேளை முதிர்வு காலத்திற்கு முன்பு நீங்கள் பணத்தை பெற விரும்பினால் முழு லாபத்தையும் பெற முடியாது. அதாவது ஏழு சதவீதம் வட்டிக்கு பதில் உங்களுக்கு 5 சதவீதம் வட்டி மட்டுமே கிடைக்கும். நீங்கள் கணக்கு தொடங்கி ஓராண்டு முடிவடைந்த பின்னர் வட்டி தொகையானது முழுவதுமாக கணக்கில் வரவு வைக்கப்படும். 18 வயதிற்கு மேற்பட்ட யார் வேண்டுமானாலும் இந்த கணக்கை திறக்கலாம்.