இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி அணை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் மாதத்திற்குள் வங்கி தொடர்பான சில பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். இது தொடர்பாக ரிசர்வ் வங்கி அனைத்து வங்கிகளுக்கும் சில விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. இது அனைத்து வங்கி வாடிக்கையாளர்களும் டிசம்பர் 31ம் தேதிக்கு முன்பு பின்பற்ற வேண்டியது கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் நீங்கள் கணக்கு வைத்திருந்தால் கேஒய்சி சரிபார்ப்பு மற்றும் பேங்க் லாக்கர் ஒப்பந்தம் தொடர்பான பணிகளை விரைவாக முடிக்க வேண்டும்.

கேஒய்சி சரிபார்ப்புக்கான கடைசி தேதி ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில் நேரடியாக சென்று நீங்கள் இந்த வேலையை முடிக்கலாம். அதேசமயம் பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் புகைப்படத்துடன் சரிபார்ப்பை முடிக்க வேண்டும். வங்கிக்குச் சென்று அங்குள்ள கேஒய்சி படிவத்தை பூர்த்தி செய்த இந்த ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கும் கேஒய்சி செயல் முறையை முடிப்பது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த செயல்முறையை முடிக்காவிட்டால் உங்களுடைய வங்கி கணக்கு முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.