கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நோயாளிகள், முதியவர்கள் மற்றும் கற்பிணிகள் இனி முக கவசம் அணிவது கட்டாயம் என கர்நாடக பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. கேரளாவில் புதிய வகை கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கர்நாடக அரசு தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

இதன் ஒரு பகுதியாக கர்நாடகாவில் 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களான கேரளாவில் கொரோனா பரவி வரும் நிலையில் தமிழ்நாட்டிலும் கொரோனா பாதிப்பு நடவடிக்கை கட்டுப்பாடுகள் அமலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.