நாட்டின் கோடை கால மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. அதன் காரணமாக முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய அணுமின் நிலையங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து  அனைத்து மின் நிலையங்களுக்கும் மத்திய அரசு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நாட்டின் கோடைகால மின் தேவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வருகிற மார்ச் 16 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை பயன்படுத்தி தங்கள் முழு உற்பத்தி திறனுடன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். இது தொடர்பாக டாட்டா பவர், அதானி மின் நிலையங்கள் உட்பட 15 அனல் மின் நிலையங்களுக்கு இந்த சுற்றறிக்கையை  மத்திய அரசு அனுப்பியுள்ளது.