உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவானது. முன்னதாக இந்தியாவில் மிகப்பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பிருப்பதாக தேசிய புவி இயற்பியல் ஆராய்ச்சி நிறுவன தலைமை விஞ்ஞானி பூர்ண சந்திரராவ் தெரிவித்துள்ளார். இந்திய தட்டு ஆண்டு ஒன்றுக்கு சீனாவை நோக்கி 5 சென்டிமீட்டர் நகர்கிறது. இதில் ஏற்படும் அழுத்தம் காரணமாக பெரிய நிலநடுக்கத்துக்கு வாய்ப்பு இருப்பதாக அவர் கூறினார். இந்நிலையில் உத்தரகாண்ட் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.