உக்ரைன் போருக்குப் பிறகு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அலாஸ்காவின் ஆங்கரேஜ் ராணுவ தளத்தில் சந்தித்தார்.
போரை நிறுத்தும் பேச்சுவார்த்தை நடந்தாலும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் இந்த சந்திப்பில் புதினின் பாதுகாவலர்கள் கையில் எடுத்துச் சென்ற ஒரு சிறப்பு சூட்கேஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சூட்கேஸில் புதினின் மலம், சிறுநீர் சேகரிக்கப்பட்டு மீண்டும் ரஷ்யா கொண்டு செல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. ‘தி எக்ஸ்பிரஸ் யுஎஸ்’ மற்றும் பிரான்ஸ் பத்திரிகை பாரிஸ் மேட்ச் புலனாய்வு பத்திரிகையாளர்கள் இதை உறுதி செய்துள்ளனர்.
புதினின் உடல்நல விவரங்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல் தடுக்கவே இப்படி செய்கிறார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இயற்கை உபாதைகள் வெளிநாட்டு நிபுணர்களின் கைகளில் சென்றால், அதை ஆய்வு செய்து புதினின் உடல்நிலை குறித்த ரகசியங்களை உலகிற்கு தெரியப்படுத்தும் வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த முன்னெச்சரிக்கை எடுக்கப்படுகிறது.
உண்மையில், இந்த “Poop Suitcase” நடைமுறை புதிதல்ல. 2017-ல் பிரான்ஸ் விஜயத்தின் போது முதல்முறையாக இதை கடைபிடித்த புதின், அதன் பிறகு எப்போதும் வெளிநாடு செல்லும்போது இதையே தொடர்கிறார். 1999-க்கு முன்பும் சில உலகத் தலைவர்கள் இதுபோன்ற நடைமுறையை பின்பற்றியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
