மணிரத்னம் இயக்கத்தில் “பொன்னியின் செல்வன்” திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் 2ஆம் பாகத்துக்கான தொழில்நுட்ப பணிகள் மும்முரமாக நடந்து தற்போது இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த படத்தின் 2-ம் பாகம் அடுத்த மாதம் 28ம் தேதியன்று தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகளவில் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன்-2 படத்தில் இடம்பெற்ற “அக நக” என்ற பாடல் இன்று (மார்ச்-20) மாலை வெளியாகும் என அறிவித்துள்ளனர்.  பொன்னியின் செல்வன் 2 ஆம் பாகத்தில் மொத்தம் 6 பாடல்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை வருகிற 29-ஆம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளனர். இவ்விழாவில் கலந்துகொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றோருக்கு அழைப்பு விடுத்து உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கிறது.