
தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மணிரத்தினம். இவர் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி 500 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்தது. இதன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகி 300 கோடிக்கும் மேல் வசூல் சாதனை புரிந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் பொன்னியின் செல்வன் 2 படம் பிளாக் பாஸ்டர் ஹிட்டானதாக தற்போது படக்குழு அதிகாரப்பூர்வமாக twitter-ல் அறிவித்துள்ளது. ஆனால் வசூல் விவரம் குறித்த தகவலை வெளியிடவில்லை. மேலும் பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பார்த்திபன், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, சோபிதா துலிபாலா போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Enthralling the audience and taking the world by storm 🔥
Have you watched the blockbuster #PS2?
Book your tickets right away!
🔗 https://t.co/sipB1df2nxhttps://t.co/SHGZNjWhx3 #PS2Blockbuster #CholasAreBack#PS2 #PonniyinSelvan2 @arrahman @madrastalkies_ @LycaProductions… pic.twitter.com/SrKqYVA2ZG— Lyca Productions (@LycaProductions) May 10, 2023