ஆளுநர் ஆர்என்.ரவி சென்னை கிண்டியில் நடந்த நிகழ்வில் பேசியபோது, தமிழகத்தில் கூடங்குளம் போராட்டத்திற்கு வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டது போலவே ஸ்டெர்லைட் போராட்டத்துக்கும் மக்களை தூண்டிவிட வெளிநாட்டு நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் வாயிலாக போராட்டம் நடத்தி ஆலையை மூடிவிட்டனர் என பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார். அவரின் இப்பேச்சு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு எந்த வெளிநாட்டில் இருந்து பணம் வந்தது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக சீமான் பேசியதாவது “அணு உலை, மீத்தேன், ஸ்டெர்லைட் ஆலை போன்றவற்றை எதிர்ப்பவர்களுக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்ததாக ஆளுநர் ரவி திமிரில் பேசுகிறார். ஆளுநர் பொறுப்புக்கு ஏற்ற வகையில் நடந்துகொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.