டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக மத்திய அரசு அறிவித்தது. நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு கடும் எதிர்ப்பு வெளியானதை அடுத்து மத்திய அரசு திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது. இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை சொன்னதால்தான் டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்கம் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட்டதாக கூறுவது ஏற்புடையதல்ல என செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மேலும் சட்டத்தின்படி அங்கு நிலக்கரி எடுக்க முடியாது. ஆகவே ஆண்டவனே கேட்டாலும் இந்த திட்டத்தை நடத்த முடியாது என்றார். அண்ணாமலை கேட்டுக் கொண்டதால் நிலக்கரி எடுக்கும் திட்டத்தை திரும்பப்பெற்றதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.