சேலம் சிறை கூடுதல் சூப்பிரண்டு வினோத் சிறையில் ஒவ்வொரு அறையாக சென்று சோதனை செய்தார். அப்போது ஏழாவது பிளாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஏட்டு தனசேகரன் என்பவரை அழைத்து கைதிகளுக்கு உணவு சரியாக வழங்கப்பட்டதா? என்பது குறித்து விவரம் கேட்டார். அப்போது தனசேகரன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.

அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மது அருந்தி உள்ளாரா என சோதனைக்கு அனுப்பினர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் தனசேகரன் மதுபோதையில் இருப்பதாக சான்று அளித்தனர். இந்நிலையில் பணியின் போது மது போதையில் இருந்த தனசேகரனை கூடுதல் சூப்பிரண்டு வினோத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்.