கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்குப்பத்தில் சண்முகம் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் நந்தினி(23) பி.ஏ படித்து முடித்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் நந்தினி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நந்தினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நந்தினி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.