கரூர் மாவட்டத்தில் உள்ள நல்லாகவுண்டம்பட்டி கிராமத்தில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் நேற்று நண்பகல் 12 மணிக்கு ஒன்றாக சேர்ந்து விளையாடினர். பின்னர் அவர்கள் தோகைமலை பகுதியில் இருக்கும் மளிகை கடையில் 15 நூடுல்ஸ் பாக்கெட்டுகளை வாங்கி பெருமாள் என்பவரது தோட்டத்திற்கு அருகே சமைத்துள்ளனர். அப்போது சமையல் எண்ணெய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் சிறுவர்கள் ஒரு வீட்டில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை நல்லெண்ணெய் என நினைத்து நூடுல்ஸில் ஊற்றி கிளறி சாப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மாலை 5 மணி அளவில் நூடுல்ஸ் சாப்பிட்ட மகாலட்சுமி(8), சத்யா(16), அபிநயா(16) ராமகிருஷ்ணன்(14) உள்ளிட்ட 15 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் 15 பேரையும் அந்த பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.