தமிழகம் முழுவதும் கடந்த 10- ஆம் தேதி 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு தொடங்கி நேற்று நிறைவு பெற்றது. இந்நிலையில் புத்தானத்தத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 140 மாணவர்கள் உட்பட 320 பேர் 12- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியுள்ளனர். இதனையடுத்து சில மாணவர்கள் தேர்வு முடிந்ததும் 17 வகுப்பறையில் இருந்த மின்விசிறி, கதவு, மேஜை, மின்விளக்கு உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் தேர்வு மைய கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் 4 மாணவர்கள் தான் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.