அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கொண்டார். இந்நிலையில் வாரணவாசி கிராமத்தில் ஆதிதிராவிடர் குடியிருப்புகளைச் சேர்ந்த 40 பேருக்கு ஏற்கனவே பட்டா வழங்கப்பட்டது. ஆனால் அந்த இடத்தில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட்டது.

எனவே வாரணவாசி ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் தலைமையில் பொதுமக்கள் மனு அளித்தனர். இதே போல் கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவி தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.