கரூர் மாவட்டத்திலுள்ள தாந்தோணிமலை பகுதியில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி தாந்தோணிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் பூங்கா நகர் பகுதியில் இருக்கும் கடையில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கடை உரிமையாளர் அகரமுத்து என்பவரை கைது செய்தனர். மேலும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.