விருதுநகர்-சத்திரரெட்டியபட்டி சோதனை சாவடியில் 49 எருமை மாடுகளுடன் லாரி நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் பிராணிகள் நல ஆர்வலர் சுனிதாவுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு வந்த சுனிதா விசாரணை நடத்திய போது, மாடுகளை ஆந்திராவில் இருந்து வாங்கி வந்து இறைச்சிக்காக கேரளாவிற்கு கொண்டு செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து பாண்டியன் நகர் காவல் நிலையத்தில் சுனிதா புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் லாரி டிரைவர் உள்பட 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர். மேலும் லாரியில் இருந்து எருமை மாடுகளை கைப்பற்றி சுனிதாவின் பொறுப்பில் ஒப்படைத்தனர்.