
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கரை பகுதியில் ஜஸ்டின் ராஜு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சுபமேரி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் ராஜு தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கருங்கல் நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர்கள் பாலூர் அருகே சென்ற போது பின்னால் வேகமாக வந்த மினி பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த கணவன் மனைவி இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு நாகர்கோவிலில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுபமேரி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.