சென்னை மாவட்டத்தில் உள்ள ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு டிரைவராக நாகராஜன் என்பவர் வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை நாகராஜன் மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது மழை பெய்தது. இதனால் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலை முகப்பு பகுதியில் ஆம்புலன்ஸ் நிற்கும் பகுதி அருகே நாகராஜன் மரத்தடியில் ஒதுங்கி நின்றுள்ளார்.

அப்போது சென்னை கோயம்பேடு நோக்கி பயணிகளுடன் வந்த அரசு விரைவு பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி நாகராஜன் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அரசு பேருந்து டிரைவர் காளிதாஸ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.