
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடலாசிரியராக இருப்பவர் கவிஞர் வைரமுத்து. இவர் தற்போது பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 600-க்கு 600 பெற்ற திண்டுக்கலை சேர்ந்த மாணவி நந்தினிக்கு தங்க பேனாவை பரிசாக கொடுப்பதாக தன்னுடைய twitter பக்கத்தில் அறிவித்துள்ளார். தமிழக வரலாற்றில் முதல் முறையாக மாணவி நந்தினி 600 மதிப்பெண்கள் முழுமையாக எடுத்து சாதனை படைத்துள்ளார்.
இவருக்கு பல்வேறு தரப்பிலிருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தங்க பேனாவை மாணவி நந்தினிக்கு நேரில் சென்று பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
ஒரு
தச்சுத் தொழிலாளியின் மகள்
மாநிலத் தேர்வில்
உச்சம் தொட்டிருப்பது
பெண்குலத்தின் பெருமை
சொல்கிறதுஎப்படிப் பாராட்டுவது?
அண்மையில் நான்பெற்ற
தங்கப் பேனாவைத்
தங்கை நந்தினிக்குப்
பரிசளிக்கிறேன்திண்டுக்கல் வருகிறேன்;
நேரில் தருகிறேன்உன் கனவு
மெய்ப்படவேண்டும் பெண்ணே! pic.twitter.com/bkSbrmrlqt— வைரமுத்து (@Vairamuthu) May 9, 2023