பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் விழா கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி வந்த நிலையில் பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி மகிழ்ந்தனர். அந்த வகையில் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு பகுதியில் மோடி பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விழாவில் அம்மாநிலத்தைச் சேர்ந்த பாஜக கட்சியின் மேயர் வினோத் அகர்வால் கலந்துகொண்டு ரத்த தானம் செய்வதற்காக வந்தார்.

அப்போது அவர் ரத்த தானம் செய்வதற்காக படுத்திருந்த நிலையில் கேமராவுக்கு மட்டும் போஸ் கொடுத்துவிட்டு ரத்த தானம் செய்யாமல் அங்கிருந்து நைசாக நழுவி சென்றுவிட்டார். அதாவது போட்டோவுக்கு போஸ் கொடுத்த பிறகு டாக்டரிடம் எதுவும் வேண்டாம் என கையசைத்தபடி சைகை காட்டிவிட்டு சிரித்தபடி அங்கிருந்து சென்றுவிட்டார். மேலும் இது குறித்தான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள நிலையில் பலரும் விமர்சித்து வருகிறார்கள்.