
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சி சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய போது, ராகுல் காந்திய டிஸ்குவாலிபைட் பண்றாங்க. பாராளுமன்ற எம்பியாக தகுதி நீக்கம் பண்றாங்க. காங்கிரஸ்காரங்க வந்தாங்க. நமது பிஜேபி சொந்தங்கள் அவங்க பாட்டுக்கு மீட்டிங் போட்டுட்டு இருந்தாங்க. கல்லை எடுத்து, பிஜேபி சொந்தங்கள் மீது வீசுறாங்க.
திரும்ப பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்களும், காங்கிரசும் சண்டை போட்டு…. காவல்துறை நண்பர்கள் யாரை கைது பண்ணாங்க அப்படின்னா…. பிஜேபி தொண்டர்களை கைது பண்ணி, ஜெயிலுக்கு அனுப்பிச்சாங்க. அப்போ தர்மராஜர் அண்ணே போன் பண்ணாரு… அண்ணே மோடி அவர்கள் காங்கிரஸ் மூக்த்து பாரத் என்று சொல்லி இருக்காரு…. கன்னியாகுமரியில் பண்ணிறேன்னு… அவர்கிட்ட கஷ்டப்பட்டு கெஞ்சி கேட்டேன்….
அண்ணே மோடி அவர்கள் சொன்ன காங்கிரஸ் மூக்த்து பாரத் என்கிறது, காங்கிரஸ் ஆட்சிக்கு வரக்கூடாது சொல்லிருக்காரு… காங்கிரஸ் இருக்க கூடாதுனு சொல்லவில்லை என்று….. அதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கக்கூடிய காங்கிரஸ் தொண்டர்கள் இதை உணர்ந்து கொள்ள வேண்டும். பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மீது கை வைத்தால், விளைவுகள் விபரீதமாக இருக்கும்.
அது நடக்க வேண்டாம் என்று…. அது நடக்க வேண்டாம் என்று கட்டுபடுத்தி வைத்திருக்கின்றோம். இந்த கூட்டத்தை நீங்க எங்க போய் கட்டுப்படுத்துவீங்க ? எங்க பொய் இந்த கூட்டத்த நிறுத்துவீங்க ? எங்கேயும் இந்த கூட்டத்தை நிறுத்தமுடியாது. அதனால் திமுக – காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும் . மறுபடியும் பிரதமரை பத்தி ஆபாசமாக பேசுவது, கேலியாக பேசுவது, பாரதிய ஜனதா கட்சி தொண்டர்கள் மீது கை வைப்பதுனா…. இந்த மாவட்டத்தில இரண்டு காட்சிகளும் காணாமல் போய்விடும் என்பதைக்கூட பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். சகோதர சகோதரிகளே என தெரிவித்தார்.