பேப்பர் கப் மற்றும் பிளாஸ்டிக் பை மீதான தடை தொடரும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

தமிழ்நாடு அரசை பொருத்தவரையில் பேப்பர் கப்,  மற்றும் மெழுகு உள்ளிட்ட உடல் நலத்திற்கு கெடு விளைவிக்கும் பொருட்கள் கொண்டு தடை தயாரிக்கப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றும்  ஒருமுறைக்கு மேல் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு  தடை விதிப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. அதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த சூழ்நிலையில்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி ரவீந்திரப்பட்  மற்றும் அரவிந்தகுமார் அமர்வில் விசாரணை நடத்தப்பட்டு,  தீர்ப்புக்கு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டிருந்தது.  இந்த நிலையில் தான் இன்றைய தினம் நீதிபதிகள் தங்களது தீர்ப்பை வழங்கிருக்கிறார்கள்.  பேப்பர் கப்புகளுக்கும் மற்றும் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்த அரசாணை  செல்லும் என  உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும்  உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருட்களை கொண்டு தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்தது சரி என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்திருக்கிறது. அதே சமயத்தில் பேப்பர் கப்  மீதான தடை தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசானது நடைமுறைகளை கொண்டு வந்திருக்கிறது.  அந்த நடைமுறைகளின் அடிப்படையில் மறுபரிசீனை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தலை உச்சநீதிமன்றம் வழங்கி இருக்கிறது.