கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஹோட்டல் மற்றும் கடைகளில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன் தலைமையில், அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திருவேணி சங்கமம் கடற்கரை பகுதி, ரத வீதிகள், கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்திய போது, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உபயோகப்படுத்தியது தெரியவந்தது.

இதனால் அதிகாரிகள் 10 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்காமல், இனி பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.