பிரதமர் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழ் விவரங்கள் கோரிய டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூபாய்.25000 அபராதம் விதித்து குஜராத் ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது. அதுமட்டுமின்றி இந்த உத்தரவை சிறிதுகாலம் நிறுத்திவைக்க வேண்டுமென்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது

தற்போது இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், “கல்வியறிவு இல்லாத (அல்லது) குறைவாக கல்வியறிவு கொண்ட பிரதமர் நாட்டிற்கு ஆபத்தானவர் ஆவார். பிரதமர் தன்னுடைய கல்வி சான்றிதழை காண்பிக்க வேண்டிய தேவை இல்லை என்று நினைக்கலாம். அல்லது அந்த பட்டப் படிப்பு போலியானதாக இருக்கலாம்” என்று அவர் கூறினார்.