
ஜி.வி.பிரகாஷ் நடித்த திரிஷா இல்லேன்னா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் ஆகிய படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன். இதையடுத்து இவர் பிரபுதேவா நடிப்பில் “பஹீரா” என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் 4 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டு பல காரணங்களால் திரைக்கு வராமல் கிடப்பில் கிடந்தது.
இந்த நிலையில் பஹீரா திரைப்படத்தை வரும் மார்ச் 3 ஆம் தேதி வெளியிடப்போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சைக்கோ திரில்லர் கதையில் உருவாகி உள்ள இத்படத்தில் பிரபு தேவாவை இதுவரையிலும் பார்க்காத ஒரு மாறுபட்ட கோணத்தில் பார்க்கலாம் என ஆதிக் ரவிச்சந்திரன் தெரிவித்து இருக்கிறார்.