ஒரு மாதத்தில் நீங்கள் எவ்வளவு செலவழிக்கிறீர்கள் எங்கு செலவழித்தீர்கள் என தெரிந்ததும் உங்கள் வீணான செலவுகளை தவிர்த்தால் சேமிப்புக்கான பட்ஜெட்டில் கூடுதலாக பணத்தை சேர்க்க இயலும். இதற்கிடையில் பட்ஜெட்டை தயாரித்து செலவழித்தால் அதிகமான செலவுகளை கட்டுப்படுத்தலாம். மற்றொருபுறம் சேமிப்புபையும் அதிகரிக்கலாம்.

மாதந்தோறும் உங்கள் சம்பள பணத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்க வேண்டும். உங்களது வருமானத்தில் 10 முதல் 15% சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். நாம் செய்யும் முதலீடு எப்போதும் பாதுகாப்பாகவும் நீண்ட காலத்துக்கானதாகவும் இருத்தல் வேண்டும். மேலும் எந்த முதலீட்டுதிட்டத்தில் எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதும் மிக அவசியம் ஆகும். பரஸ்பர நிதியங்கள் நல்ல லாபத்தை கொடுக்கிறது.