மோடி எனும் சமூகத்தை ராகுல் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் குஜராத்தின் சூரத் நீதிமன்றம் ராகுல் காந்திக்கு 2 வருடம் சிறை தண்டனை விதித்தது. அதன்பின் குற்றவியல் வழக்கில் 2 (அ) அதற்கு மேற்பட்ட வருடங்கள் தண்டனை பெறுபவர்கள் மக்கள் பிரதிநிதியாக தொடர முடியாது எனும் சட்டத்தின் கீழ் ராகுல்காந்தி தகுதி இழப்புக்கு ஆளானார். சென்ற மாதம் 24ம் தேதி ராகுல் எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து ஏப்ரல் 22-ஆம் தேதிக்குள் அரசு பங்களாவை காலி செய்யவேண்டும் என மக்களவை செயலகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இந்த நிலையில் அரசு பங்களாவை காலிசெய்த ராகுல், அதன் சாவியை இன்று மக்களவை செயலகத்திடம் ஒப்படைத்தார். முன்னாள் காங்கிரஸ் தலைவர் வெள்ளிக்கிழமையே தன் உடமைகள் அனைத்தையும் அதிகாரபூர்வமான இல்லத்திலிருந்து எடுத்துக்கொண்டு சென்றார்.