
வருங்கால வைப்பு நிதி கணக்கில் நிறுவனத்தின் சார்பாகவும், பணியாளர்களின் சார்பாகவும் மாதந்தோறும் 12 சதவீதம் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு வரவு வைக்கப்படுகிறது. ஊழியர்களின் கணக்கில் இருக்கும் இந்த தொகையானது அவருடைய எதிர்கால வாழ்விற்கு பல்வேறு உதவிகளை செய்யும் விதமாக திட்டமிடப்பட்டுள்ளது .மத்திய அரசு ஊழியர்களின் பிஎஃப் தொகைக்கு வருடம்தோறும் குறிப்பிட்ட சதவீதம் வட்டியை நிர்ணயித்து அதை அவர்களுடைய வங்கி கணக்கிற்கு நேரடியாக செலுத்தி வருகிறது.
நடப்பு வருடத்திற்கான வருங்கால வைப்பு நிதி கணக்கிற்கான வட்டி தொகை 8.15 சதவீதமாக நிரனயம் செய்யப்பட்டு சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்களுடைய வட்டி தொகையானது கணக்கிடப்பட்டு பிஎஃப் கணக்கில் விரைவில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஆறு லட்சம் அளவிற்கு தன்னுடைய கணக்கில் வைத்திருப்பவர்களுக்கு ஐம்பதாயிரம் வட்டி தொகையாகும். 5 லட்சம் கணக்கில் உள்ளவர்களுக்கு 42000 வட்டி கிடைக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனை இபிஎப் பயனாளர்கள் வீட்டில் இருந்தபடியே செல்போனில் EPFO தளம், மிஸ்டு கால் மற்றும் எஸ் எம் எஸ் மூலமாக அறிந்து கொள்ளலாம்.