வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பெரியபட்டறை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது, காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தில் எங்கள் ஊருக்கு தண்ணீர் வருவதில்லை.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போர்வெல் பழுதடைந்து இருக்கிறது. மேலும் புதிய கால்வாய் வசதி இல்லாததால் பல மாதங்களாக மழைநீருடன் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அடிப்படை வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.