தென் ஆப்பிரிக்காவில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு 9 மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கேப் டவுன் மாகாணத்தில் வெம்பே நகரில் இருக்கும் பாலத்தில் வங்கிக்கு பணம் எடுத்துச்சென்ற வேனும்- சுற்றுலா பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. அப்போது பேருந்து பாலத்தில் இருந்து உருண்டு ஆற்றில் விழுந்ததில் 20 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர்களின் சடலத்தை கைப்பற்றி வருகின்றனர். கன மழை காரணமாக மேம்பாலம் ஈரப்பதத்துடன் இருந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.