செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ,  வைகை ஆற்றை சுத்தம் செய்யாமல்,  தொற்றுநோய் பரவுவதற்கு கொசுக்கள் இன்றைக்கு அங்கு தான் உற்பத்தி ஆகிறது. இதையெல்லாம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கணும் என அமைச்சர்கள் சொல்ல வேண்டாமா ? நீங்க எல்லாம் பத்திரிக்கை,  ஊடகங்கள் இருக்கீங்க…  அந்த அமைச்சர பாத்து நீங்க கேட்க  வேண்டாமா ? வெறும் அரசாங்கத் திட்டத்தை தொடங்கி வச்சிட்டு….  அதுல பெயர் வாங்கிட்டு போனா மட்டும்  போதுமா ?

இந்த அரசாங்கம் அதை செஞ்சிருக்கு…. இதை செஞ்சி இருக்குன்னு வாயிலேயே அல்வா கிண்டிட்டு…  வாயிலேயே நம்ம சீனி சக்கர சித்தப்பா,  எட்டுல எழுதி  நக்கப்பா…  நம்ம முதலமைச்சர் ஏற்கனவே எதிர்க்கட்சியாக இருக்கும்போது இதே வார்த்தையே சொன்னாரு…. அந்த மாதிரி சொல்லிட்டு போனா போதுமா?

எதுவுமே செய்யல… நாங்க எல்லாம் கொதிச்சி போய் இருக்கிறோம். இந்த மேற்கு தொகுதியில் மக்கள் எல்லாம் இப்ப என்ன நினைப்பாங்க ?  செல்லூர் ராஜு  அவன் இருக்கும் போது வந்தாங்க…. இப்ப என்ன ஒண்ணுமே செய்யலையே….  எல்லாம் இந்த அமைச்சர் கேக்க மாட்டேங்கிறாரு…  என்ன இந்த எம்எல்ஏ கேட்க மாட்டேங்கிறாரு ? இந்த தொகுதி எம்எல்ஏ கேட்க மாட்டாரா ? மூணு தடவை போய் இந்த ஆள ஜெயிக்க  வச்சோம் என எங்கள் மக்கள் கேட்க மாட்டாங்களா ? தோணாதா ? என தெரிவித்தார்.