ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரத்தில் 10 மணி நேரத்திற்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் குளம் போல தேங்கி நின்றது. இந்நிலையில் நகராட்சி அலுவலகம், பேருந்து நிலையம், முனியசாமி கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் தேங்கிய மழை நீர் சிறிது நேரம் கழித்து வடிந்துவிட்டது.

ஆனால் பழைய மாவு மில் பின்புறம் இருக்கும் 15 வீடுகளை சூழ்ந்த மழை நீர் வடியாமல் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.