
தர்மபுரி மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயில் வாட்டி வதைக்கிறது. நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீரென பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதனால் தர்மபுரி-சேலம் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர். இந்நிலையில் பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், மழை பெய்ததால் இரவு குளிர்ச்சியான சூழல் நிலவி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.