காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுந்தராம்பிகை உடனுறை கச்சபேஸ்வரர் திருக்கோவில் பிரம்மன், சூரியன், திருமால் உள்ளிட்ட தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்ட வரலாற்று சிறப்புக்குரிய திருத்தலமாகும். சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கோவில் புதுப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் கோவிலில் 33 யாக சாலைகள் அமைக்கப்பட்டு அதில் 160 சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை செய்தனர். இதனையடுத்து சிவாச்சாரியார்கள் புனித நீர் குடங்களை ராஜகோபுரங்கள், மூலவர் விமானம், பரிவார தெய்வங்கள் மீது ஊற்ற மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்தனர்.