ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பொங்கலுக்கு மறுநாள் பூ பறிக்கும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டு சென்னிமலை நகரப் பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காமராஜ் நகர் வனப்பகுதிக்கு பூ பறிப்பதற்காக சென்றுள்ளனர்.

இதற்காக வீடுகளில் இருந்து கரும்பு மற்றும் இனிப்பு, கார வகைகளை எடுத்துக்கொண்டு தங்கள் வீட்டு ஆண்களுடன் வனப்பகுதிக்கு சென்ற பெண்கள் அங்கு அமர்ந்து தின்பண்டங்களை பகிர்ந்து உண்டு மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக சாணத்தால் பிடித்து வைத்திருந்த பிள்ளையார் மற்றும் கரும்பு, மஞ்சள் செடி ஆகியவற்றை வைத்து பொங்கல் வைத்து நீர் நிலைகளில் விட்டு மகிழ்ந்தனர்.