ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய கழக கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ்,  நான் வருகிறபோது பார்த்தேன்…. நம்மை கொடி பிடிக்க கூடாது என்று சொன்னவர்…..  நம்மை லெட்டர் பேடு பயன்படுத்தக்கூடாது என்று நீதிமன்றத்திலே உத்தரவு வாங்கியவர்….

நீதிமன்றத்தின் மூலமாக அரசியல் அபகரிப்பை நடத்திக் கொண்டிருக்கும் எடப்பாடி, இன்றைக்கு மக்கள் மன்றத்திலே அவருக்கு என்ன மரியாதை இருக்கிறது என்று சொன்னால்,  அண்ணன் ஓபிஸ் செல்கிற இடமெல்லாம் சிறப்பு என்று சொன்னால் எடப்பாடி செல்கிற இடம் எல்லாம் செருப்பு என்பது தான் அரசியலாக இருக்கிறது. ஒரு அபகரிப்பு அரசியலை நடத்தி முடித்து விட்டேன் என்று ஆதங்கத்தில் தலைவிரித்தாடிய எடப்பாடி, இப்போது முட்டி  செத்து விட்டது என்று நாற்காலியில் உட்கார்ந்து விட்டார்.

அவருக்கு முட்டி செத்து விட்டதாம். நீதிமன்றத்திலே ஆஜர் ஆனதிலிருந்து தப்பிப்பதற்காக நாற்காலியை போட்டுக் கொண்டு,  அதிலேயே அமர்ந்து கொண்டு பூச்செண்டை வாங்கிக் கொண்டிருக்கிறார். நான் இதை சொல்வதற்கு காரணம், எடப்பாடியின் அரசியல் உட்கார்ந்து விட்டது. அண்ணன் ஓபிஎஸ்யின் அரசியல் புறப்பட்டு விட்டது என்பதற்கு சாட்சி தான், கோவையிலே தொடங்கிய அரசியல் நாளை 2026 கோட்டையிலே நடைபெறும் என்பது சத்தியமான உண்மை என தெரிவித்தார்.